தமிழ்நாட்டில் தாய் இறந்த துக்கத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுத சென்ற மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன், இவர் மனைவி சுதா (43) இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் உள்ளார்.
சுதா சேலம் பெண்கள் கிளை சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுதாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திடீரென உடல் நடக்குறைவு ஏற்ப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல் நிலை மோசமடைய சிகிச்சை பலனினிறி உயிரிழந்தார்.
பின்னர் சுதாவின் சடலம் அவர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தாயின் சடலத்தை பார்த்து இரவு முழுவதும் சுதாவின் மகள் மோனிஷா அழுது கொண்டிருந்தார்.
நேற்று காலை மோனிஷாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருந்தது. தாய் இறந்த துக்கத்தில் இருந்து மோனிஷா மீளாமல் இருந்ததால் அவரை தேர்வு எழுத வேண்டாம் என உறவினர்கள் கூறினர்.
ஆனால், மோனிஷா நான் கட்டாயம் தேர்வு எழுதுவேன், நான் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது எனது தாயாரின் விருப்பம்.
நான் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என தாய் ஆசைப்பட்டார். நான் தேர்வு எழுதவில்லை என்றால் எனது தாயார் விரும்பியது நடக்காமல் போய்விடும் என மோனிஷா கூறியுள்ளார்.
இதையடுத்து தாயின் உடலை தொட்டு வணங்கிய மோனிஷா கண்ணீர் மல்க வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.