தியத்தலாவ ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற வந்த பெண்ணின் அட்டையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாவை வேறு அட்டைக்கு மாற்றி மோசடி செய்த முன்னாள் சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 48 வயதுடையவர்எனவும் மதவாச்சியில் சிறிலங்கா இராணுவத்தில் கடமையாற்றி விலகியவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பணம் பெறுவதற்கு முயன்ற பெண்ணுக்கு உதவுவதாக கூறி
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு முயன்ற பெண்ணுக்கு உதவுவதாக கூறி அந்த பெண்ணிடம் அட்டையை வாங்கி அதிலிருந்து வேறு அட்டைக்கு இரண்டு இலட்சம் ரூபாவை மாற்றியுள்ளார்.
இதன் பின்னர் கொழும்பு செல்லும் பேருந்தில் பயணித்த சந்தேகநபர் ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
தியத்தலாவ நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் உடனடியாக பின்பக்கமாக வந்து பேருந்தை நிறுத்தி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.