அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளரான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றவாளியாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சசிகலா அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக எப்படி தெரிவு செய்யப்பட்டார் என்று தேர்தல் ஆணையம் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு சசிகலா தரப்பில் அதிமுக-வின் உரிய விதிகளின் படியே தான் தெரிவு செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முக்கிய நடவடிக்கைக்கு காரணம் அதிமுக-வின் முன்னாள் உறுப்பினரும் மற்றும் எம்பியுமான சசிகலா புஷ்பாவும் மற்றும் அதிமுக-வின் எம்பி மைத்ரேயன் தான் காரணம், அவர்கள் கொடுத்த இந்த புகாரின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சசிகலா புஷ்பா அதில், கட்சிக்குள் சேர்க்கப்பட்ட பிறகு நடந்த செயற்குழுவுக்கு, ஜெயலலிதாவுக்கு உதவியாக கூட்டத்துக்கு வந்தார் சசிகலா.
அன்று செயற்குழு உறுப்பினர்களின் பெயரை நான்தான் எழுதினேன். அதில், முதல் பெயரே என் பெயர்தான்.
அதில் எந்த இடத்திலும் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை. அவர் எப்படி செயற்குழு உறுப்பினர் கிடையாதோ, அதேபோல கட்சியின் உறுப்பினரும் கிடையாது.
தற்போது தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம்கொடுப்பதற்காக, உறுப்பினர் அட்டையை அவர் அனுப்பினால், அதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த அட்டையில் இருப்பது ஜெயலலிதா கையெழுத்துதானா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் உறுப்பினர் அட்டையில் மோசடி செய்திருந்தால், டெல்லி காவல்துறையில் புகார் அளித்து, கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அனைத்துக் குளறுபடிகளையும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.