பொதுவாகவே பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு முக்கிய இடத்தை பிடித்துவிடும்.ஆனால் இத்தினத்தில் மகிழ்ச்சியாக கரும்பு சாப்பிட்டுவிட்டு பலரும் நாக்கில் எரிச்சலை உணர்வார்கள்.
ஆனால் இதற்கு காரணம் கரும்பு சாப்பிட்டது கிடையாது. கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம். கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தால் உடலிலும் நாக்கிலும் பல்வேறு அசௌகரியம் ஏற்படும்.
இதற்கு காரணம் கரும்பு சாப்பிடது தான் என பலரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் கரும்பு சாப்பிட்டதன் பின்னர் தண்ணீர் குடிப்பதே இவ்வாறான உபாதைகளுக்கு காரணம்.
அதாவது கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது மிகவும் தவறான காம்பினேஷன். ஏனெனில் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீர் குடித்த பின் தவறான வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அதாவது எக்சோதெர்மிக் ரியாஷனை உருவாக்கும். எக்சோதெர்மிக் ரியாக்ஷன் என்பது ஒரு வேதியியல் தாக்கம் வெப்பத்தை வெளியிட்டபடி நடைபெறும். அது வெப்பம் விடு வினை அல்லது புறவெப்பத்தாக்கம் (Exothermic reaction ) எனப்படும்.
இத்தகைய வெப்ப வெளிப்பாடு பொருள்களைக் கரைக்கும் போது அல்லது கலக்கும் போது நிகழும். அந்த வகையில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்த கரும்பு சாருடன் தண்ணீர் கலக்கும்போது அது வெப்பத்தை அதிகரித்து வயிற்று வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
எனவேதான் நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறீர்கள்.எனவே இனி கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். தண்ணீர் குடித்தே தீருவேன் எனில் கரும்பு சாப்பிடுவதையே தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.