களனிப் பல்கலைக்கழகத்தில் பிந்தைய டிப்ளோமா பாடநெறியில் விரிவுரை ஒன்றுக்கு வந்த பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன, விரிவுரையை முடித்துக்கொண்டு திரும்பும் போது மாணவர்கள் குழுவொன்றின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.
டட்லி சிறிசேன தனது விரிவுரையை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது, மாணவர்கள் அவர் பயணித்த காரை நிறுத்தி அவரை திட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டட்லி சிறிசேனவை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வருவதற்கு தகுதியற்றவர் எனவும், விரிவுரை ஆற்றுவதற்கு அவருக்கு தகுதி இல்லை எனவும் கூறி மாணவர்கள் குழுவொன்று காரை சுற்றி வளைத்துள்ளது.
அவ்விடத்திற்கு வந்த விரிவுரையாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி டட்லி சிறிசேனவை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பில் டட்லி சிறிசேன கூறுகையில், இது ஒரு சிறு மாணவர் குழுவின் போராட்டம் எனவும், அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.