Loading...
திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த யுவதி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் ஒருவரை பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பதுளை அலுகொல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதியை திருமணம் செய்வதற்கு விரும்பியுள்ள போதும் யுவதி மற்றுமொரு இளைஞரை திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த இளைஞன் தன்னிடம் இருந்த யுவதியின் நிர்வாணப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சந்தேக நபரை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பி.கே. கால்லகே தெரிவித்தார்.
Loading...