இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேம்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம் என்ற தலைப்பின் கீழ் நடந்த மாநாட்டில் பேசிய போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல, பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
ஆங்கிலேயர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முயன்றபோது அதனை எதிர்கொண்டதில் அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானது.
அவர் அளித்த ஆய்வறிக்கையின் மூலமாகவே இந்திய ரிசர்வ் வங்கி உருவானது.
தற்போது மோடியின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது, இதுவரை 35 நாடுகள் தங்கள் நாட்டில் இந்திய ரூபாயை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்மூலம் அந்த நாடுகளுக்கு செல்லும் போது நமது நாட்டு பணத்தையே பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.