இன்றைய காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இருப்பது பழைய சோறு தான்.
முதல் நாள் ஆக்கிய சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி அதனை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில், அந்த தண்ணீருடன் கஞ்சியை குடிக்க வேண்டும்.
பழைய சோறில் வேறு வந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி11, பி12 ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளது.
பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், இதை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சினைகள் நீக்குவதுடன், செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால் உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கின்றது.
மாலையில் இதைச் சாப்பிடுதால்,வயிறு தொடர்பான நோய்கள் குணமாகின்றது. உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும்.
ரத்த அழுத்தம் சீராகும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு, அந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக குறையுமாம்.
ஒவ்வாமை பிரச்சினைகளுக்கு, தோல் தொடர்பான வியாதிக்கும் நல்ல தீர்வு அளிக்கின்றது.