பொதுவாகவே சைவ சமையலாக இருந்தாலும் சரி அசைவ சமையலாக இருந்தாலும் சரி அதில் தக்காளி முக்கிய இடம்பிடித்துவிடும்.
சமையலுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி அழகு சேர்க்கும் தக்காளியில் எண்ணில் அடங்கா மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது.
கரோட்டினாய்டுகள் லைகோபீன் மற்றும் β-கரோட்டீன் போன்றவையானது புற்று எதிர்ப்பு பண்புகளை உடலுக்கு வழங்குகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தக்காளியானது வழங்கினாலும் ஒரு சிலர் இதை உட்கொள்ளக்கூடாது.
அவ்வாறு தக்காளியை யார் தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். யார் எல்லாம் தக்காளி சாப்பிடக்கூடாது ? Calcium oxalate உள்ள இந்த தக்காளியானது சிறுநீரக கற்களை ஏற்படுத்தக்கூடும்.
சிறுநீரக கல்லை அதிகரிக்க கூடியது இந்த தக்காளி எனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்வதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.
Salmonella எனக்கூடிய bacteria வானது வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் வயிற்றுபோக்கால் பாதிக்கப்படுபவர்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாமை பிரச்சனையை உருவாக்கக்கூடிய Histamine ஆனது தக்காளியில் உள்ளதால் இதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி தோலில் தடிப்புகள், இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கு வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் பிரச்சனையை தக்காளியானது அதிகரித்துவிடும் என்பதால் அவ்விதமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்த்தல் அவசியம். Acidic கூறுகளானது இத்தக்காளியில் உள்ளதனால் Acidity பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.