Loading...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும்.
Loading...
எனவே, சுவாச நோய் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா நகர எல்லையில் பூ பனி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...