Loading...
மாத்தளை – ரத்தோட்டை , கம்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (15.01.2024) இடம்பெற்றுள்ளது.
Loading...
மாத்தளை – கம்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக மூங்கில் தடியை பயன்படுத்திய போது அந்த மூங்கில் தடியானது அருகில் இருந்த மின் கம்பத்தில் பட்டதில் மரத்தில் இருந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கம்மடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...