இலங்கையில் வடக்கு பகுதியில் பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்றைய தினம் (15) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே ஏராளமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதலின் போது சுமார், 34 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கடற்கரையை அண்மித்த புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (15) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி கோதம்பரா தலைமையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த மூட்டையை சோதனையிட்டபோது, அந்த சாக்குப்பையில் சுமார் 34 கிலோ எடையுள்ள 16 கேரள கஞ்சா பொதிகள் அடைக்கப்பட்டு இருந்தது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் 13 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.