சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் பீரங்கி படைப்பிரிவு சிப்பாய் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நகரில் உள்ள சர்வதேச பாடசாலைக்கு முன்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் கண்டி வீதி, வன்னியம்குளம், அனுராதபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய பிரதேசத்தில் வசித்த “மருத்துவரை” கொன்று, தற்போது துபாயில் மறைந்திருக்கும் பெரும் போதைப்பொருள் வியாபாரி கரந்தெனிய சுத்தாவிற்காக ஹெரோயின் போதைப்பொருளை அனுராதபுரத்தில் விநியோகித்தவரே இவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் இவருடன் சேர்த்து ஹெரோயினை வாங்க வந்த ஐவர் “ஈஸி கேஷ்” முறையில் பெற்ற 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம். மற்றும் ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் 25 முதல் 40 வயதுடைய தலாவ, தேவனம்பியதிஸ்ஸபுர, சாலியபுர ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.