இன்று சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர்.
சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. அந்த வகையில் வயிற்றுப் புற்றுநோய், வயிற்றின் மென்படலத்தில் உருவாகத் தொடங்கும்.
இந்த புற்றுநோய் குறித்து மக்களிடம் முறையான விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
இதனடிப்படையில் நமக்கு வந்திருப்பது சாதாரண வயிற்று வலியா அல்லது புற்றுநோயா? என்பது குறித்து எவ்வாறு அறிந்துக்கொள்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், குடும்பத்தில் வேறு யாருக்காவது இதற்கு முன் வயிற்றுப் புற்றுநோய் வந்திருப்பது போன்றவை இந்த கேன்சருக்கான ஆபத்து காரணிகளாகும்.
சில சமயங்களில் ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா புற்றுநோய் அல்லாத அல்சர் நோயை உருவாக்கக் கூடும். நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம், அடிவயிற்றில் வலி, குமட்டல், பசியின்மை போன்றவை வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
செரிமானமின்மைக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விளம்பரம் வயிற்றுப் புற்றுநோய்க்கு இதுதான் அறிகுறி என குறிப்பிட்டு எதையும் கூற முடியாது.
ஆகையால் மேற்கூறிய அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்கள் மருத்துவமனை சென்று எண்டோஸ்கோபி உதவியுடன் தனக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம்.
வயிற்றுப் புற்றுநோய் முற்றிய பின் உடல் எடையிழப்பு, மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதை வைத்து நமக்கு வந்திருப்பது வயிற்றுப் புற்றுநோய் என்பதை ஓரளவு கணிக்க முடியும்.
எனினும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இதை எளிதாக குணபடுத்த முடியும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
சாதாரணமாக நமக்கு ஏற்படும் வயிற்று வலி அஜீரணக் கோளாறு காரணமாக வரக்கூடும். இவை சீக்கிரமாகவே சரியாகிவிடும். ஆனால் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு சீக்கிரம் குணமாகாது.
இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் கடுமையாகவும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது.