Loading...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நிலை காரணமாக அவர் ஜயவர்தன புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி பி. திஸாநாயக்க இன்று நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.
வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் சில காலமாக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Loading...
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...