அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.
குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது.
அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.
மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டொலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.
ஒரு அமெரிக்க டொலர் மதிப்பு₹ 83.10. ஒரு அமெரிக்க டொலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.