ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து புதிய பொருளாதார திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ இணைக்கமிட்டியும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் இணைந்து அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடன்கள் ஒரு புறத்தில் செலுத்தப்படும் அதேவேளை, மறுபுறத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த திட்டத்திற்கு யோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த வாரம் கூடி புதிய பொருளாதாரத் திட்டம் குறித்து ஆராய்ந்து, புதிய அபிவிருத்தித் திட்டம் பற்றி அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.