Loading...
நாடளாவிய ரீதியில் தேங்காய் அறுவடையில் பற்றாக்குறை நிலவுவதாக தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை.
Loading...
ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
Loading...