வட மாகாண அபிவிருத்திக்கு புதிய திட்டம் ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாதம் ஒரு முறை அல்லது இரு முறை தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஜனாதிபதியிடம் கூறுங்கள்” என்ற வேலைத்திட்டத்தின் முதலாவது அலுவலகத்தை வடக்கில் நேற்று திறக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் தொடர்பில் ஜனாதிபதி இதன் போது கருத்து வெளியிட்டிருந்தார்.
எதிர்ப்பு போராட்டங்கள், சத்தியாகிரகம், பேரணி நடத்துவதற்கு அவசியமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அனைத்து விடயங்களுக்கும் அதனை செய்தல் அதற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும். எனினும் அவை அனைத்து எனது பதவி காலத்தில் மாத்திரமே மேற்கொள்ள முடியும். முன்பு அவ்வாறு செய்திருந்தால் வெள்ளை நிறத்தில் வேன் ஒன்று தேடி வந்திருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.