லண்டன் குடியிருப்புகளின் விலை கடந்த 2009க்குப் பிறகு மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
லண்டனில், நவம்பர் 2022 முதல் 2023 வரையிலான ஆண்டில் குடியிருப்புகள் விலையில் சுமார் ஆறு சதவிகிதம் சரிவடைந்துள்ளன. அக்டோபர் 2023 வரையிலான 12 மாதங்களில் ஆண்டு பணவீக்க விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே லண்டனில் குடியிருப்புகளின் விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும், 2023 நவம்பர் மாதத்தில் மட்டும் 10,000 பவுண்டுகளுக்கு மேல் விலை சரிவடைந்துள்ளது. இருப்பினும், லண்டனின் சராசரி குடியிருப்பு விலைகள் பிரித்தானியாவில் உள்ள எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்ததாகவே உள்ளது.
ஒரே ஆண்டில் 6 சதவிகிதம் விலை வீச்ழ்ச்சி அடைந்தும், லண்டனில் குடியிருப்புகளின் சராசரி விலை 505,000 பவுண்டுகள் என்றே தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் குடியிருப்புகளின் விலை 2.9 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது, ஆனால் வேல்ஸ் பகுதியில் குடியிருப்புகளின் விலை 2.4 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஆனால் ஸ்கொட்லாந்தில் குடியிருப்புகளின் விலை 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வடக்கு அயர்லாந்திலும் குடியிருப்புகளின் விலை 2.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.