பொதுவாகவே வெப்ப மண்டல நாடுகளில் இலகுவாகவும் மழிவான விலையிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்றுதான் கொய்யா பழம்.
குறைந்த கலோரி கொண்ட கொய்யா பழம் உடல் ஆராக்கியத்துக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதுடன் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
எப்படி டயட் முறையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது உதவும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொய்யா பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும் எனவே தேவையில்லாத உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டீர்கள். அடுத்ததாக இது குறைந்த கலோரி கொண்டது.ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம்.
டயட்டின் போது விரைவில் களைப்படைவதை தடுத்து எனர்ஜியை கொடுக்கின்றது. கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன் , வைட்டமின்கள் , மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானமின்மை காரணமாக பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு கொய்யா சிறந்த நண்பன். அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு கொய்யா பழம் மிக சிறந்த தெரிவாக அமையும்.