மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி இந்த விவாதம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யினால் இந்த விவாதம் பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. 9ம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இதேவேளை, பேண்தகு அபிவிருத்தி உத்தேச சட்டம் தொடர்பில் எதிர்வரும் 8ம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் வர்த்தக விவகார அமைச்சினால் இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.