புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும்.
அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது.
ஜாதகத்தில் சனித்திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்.
குறிப்பாக சனிக்கிழமைகளில் இவ்வாறு செய்தால், மனம் மற்றும் வாழ்வில் அமைதியும் வளமும் பெருகும் என்று கூறப்பட்டுள்ளது.
இறைதன்மை கொண்டுள்ள யாரும் வயது வித்தியாசம் இல்லாமல் உச்சரிக்கலாம். 1008 தடவை உச்சரித்தால் போதுமானது.
சனியின் தாக்கத்தை ஆஞ்சநேயர் எப்படி துரத்தினார்?
இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.
“ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார்.
“கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.
சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார்.
“சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கி விட்டார்.
“ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.