பாடகி சுசித்ராவின் டிவிட்டர் ஐடியிலிருந்து பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்துவது குறித்து அவர் கணவர் நடிகர் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
திரைப்பட பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
சக பாடகியான சின்மயி போன்றோர், சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றுக்கு அளித்த பேட்டியில், தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
சுசித்ரா டிவிட்டர் ஐடியிலிருந்து வெளியான பதிவுகளில் மோசமாக சித்தரிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து விளக்கம் கேட்டு மிகுந்த புரிதல் உணர்வுடன் செயல்பட்டார்கள்.
அவர்களிடம் நான் கூறியது உணர்வெழுச்சி நிலையில் உள்ளதன் வெளிப்பாடே அந்தப் பதிவுகள்.
இதில் தனிப்பட்ட பகையெதுவும் இல்லை, உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் பதிவு செய்யப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
சுசித்ரா நிலைமையை சரிசெய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம், சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.