காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது.
கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.
மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நச்சுக்கிருமிகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமடைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
உடல் உறுப்புகளில் எலும்புகளை பலப்படுத்தும் அளவுக்கு நிறைவான கால்சியம் சுண்டைக்காயில் காணப்படுகின்றது.
சர்க்கரை நோயினால் ஏற்படும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு மற்றும் வயிற்று பொருமல் முதலியவையிலுருந்து விடிவுபெற சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.
பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் வயிற்று பொருமல் விரைவில் நீங்கும்.
மார்புச்சளி, Asthma போன்றவைலிருந்து விடுவுபெற உப்பு கலந்த மோரில் சுண்டைக்காயை காயவைத்து பின்னர் அதை எண்ணெயில் வறுத்து இரவில் உட்கொண்டு வரவேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஓடு சேர்த்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட வேண்டும்.
குடல் பூச்சிகள் ஒழிக்க சம அளவு சுண்டைக்காய் வற்றலையும் மற்றும் ஒமத்தையும் எடுத்து அரைத்து, தினமும் காலையில் 2 கிராம் அளவு சாப்பிட வேண்டும்.