110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1,486 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
அதனை காணொலி மூலம் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், 1375.95 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. 111 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.