பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.
இதயம் என்பது உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு என அனைவருக்கும் தெரியும்.
அதில் தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடைகிறது. ஆனால் அப்படிப்பட்ட தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் கண்டிப்பாக அது இதயத்திற்கு ரத்தம் செல்லும் திசையில் தடையாகத்தான் இருக்கும்.
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு, இது அதிகரிப்பது காரணமாக, உடலில் பல ஹார்மோன்கள் மற்றும் செல் சவ்வுகள் உருவாகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்கவே இல்லை என்றால், நாம் நீண்ட நாட்கள் வாழ முடியாது.
அதுவும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் LDL எனப்படும் ஒருவகை கொலஸ்ட்ரால் நமக்கு மிகவும் மோசமானது. இதன் காரணமாக மாரடைப்பு உட்பட இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுகின்றன.
இரண்டு வகைப்பட்ட கொலஸ்ட்ராலில் LDL (low-density lipoproteins) அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அது நமக்கு பிரச்னைதான்.
அவ்வாறு உடலில் கெட்ட கொலஸ்ரால் அதிகரிக்கும் போதும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் ஆரம்பிக்கும் போதும் உடல் ஒருசில முக்கிய அறிகுறிகளை வெளிபப்படுத்துகின்றது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் கை மற்றும் கால்களில் தெரியத் தொடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கை, கால்களில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது.
இதன் காரணமாக, நரம்புகளின் நிறம் மாறத் தொடங்குகிறது. கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மை ஆகியவை அவற்றில் வரத் தொடங்குகின்றன. இதனால் அதிக வலியும் ஏற்படுகிறது. மேலும் கைகளும் கால்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இரத்தக் குழாய்களில் ஒருவிதமான ஒட்டும் திரவம் போல் சேரத் தொடங்குகிறது. இது தோலில் தடிப்புகள் அல்லது சிவந்த படைகள் போன்றன உடலின் பல பாகங்களில் தெரிய ஆரம்பிக்கும்.
இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேரத் தொடங்கும் போது, அது தமனிகளை விரிவடையச் செய்கிறது. இதனால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செல்வதில்லை.
அதன் விளைவாக நகங்களில் கருமையான கோடுகள் உருவாகத் தொடங்குகின்றன. சில நேரங்களில் நகங்கள் வெடிக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில், நகங்கள் மெல்லியதாகவும் பழுப்பு நிறமாகவும் மாறத் தொடங்கும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் உருவாகத் தொடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இந்தப் புள்ளிகள் மூக்கில் வந்து சேரும்.
இது Xantheplasma palpebrarum (XP) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் அதனை ஒருபோதும் போது அலட்சியப்படுத்த கூடாது.