கொலஸ்ட்ரால் பிரச்சினையை குறைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சீரக தண்ணீர் அற்புதமான பயனைக் கொடுக்கின்றது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க சீரக தண்ணீர் உதவி செய்கின்றது. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து அதனை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற கெமிக்கல்கள் நிறைந்த இந்த சீரக தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு பெயர் போனதாகும்.
சீரக விதைகளில் இருக்கும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலுடன் ஒட்டிக்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்கின்றது.
மேலும் தொடர்ந்து 8 வாரங்களுக்கு சீரக தண்ணீரை வெறும்வயிற்றில் எடுத்துக்கொண்டால், நல்ல மற்றும் கெடட கொழுப்புகள் குறைவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீரக தண்ணீரை பருகுவதால் செரிமானம் மேம்படுவதுடன், மலச்சிக்கல், வாயு பிரச்சினை மற்றும் வயிறு உப்புசம் இந்த பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பு எரிப்பதை மேம்படுத்தும் சீரக தண்ணீர் உடல் எடையையும் குறைக்கின்றது.
சீரக தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து குடித்துவருவதால் ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கும்.
வீக்கத்தை எதிர்த்து போராடுவதுடன், பல்வேறு விதமான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.