கனேடிய பெண் ஒருவர் நடந்துச் சென்று கொண்டிருந்த போது பாதையில் உரையொன்று கிடப்பதை அவதானித்து அதை எடுத்து பார்த்துள்ளார், அதில் பெருந்தொகையிலான பணம் காணப்பட்டுள்ளது.
கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேற்று முன்தினம்(18) வான்கூவரைச் சேர்ந்த Talia Ball என்ற பெண்ணெ குறித்த உரையை எடுத்துள்ளார்.
இந்நிலையில், உரையில் பெருந்தொகையிலான பணம் இருந்துள்ளதொடு, அந்த உரையில் “குழந்தைகளுக்காக” எழுதப்பட்டிருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.
அத்துடன், உரையில் இருந்த பணம் யாரோ ஒரு குடும்பத்தினருடையது என்பதுடன் அவர்களை பணத்தை தவற விட்டிருக்கலாம் என புரிந்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் உடனடியாக செயற்பட்ட அவர் சமூக ஊடகங்களில் தான் ஒரு உரைக் கண்டெடுத்ததையும், அதில் பணம் இருந்ததையும் குறித்து விவரமாக குறிப்பிட்டு, பணத்தின் உரிமையாளர் தக்க ஆதாரங்களுடன் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பணத்தை இழந்த நபரனின் நண்பர் ஒருவர் குறித்த விடயத்தை அறிந்து, பணத்தை தொலைத்த நபரை Taliaவிடம் அறிமுகம் செய்துள்ளதோடு, பணத்தை இழந்து கவலையடைந்திருந்த அந்தக் குடும்பம், பணம் திரும்பக் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், அந்தக் குடும்பத்தினர் Taliaவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 50 டொலர்களை பரிசாக வழங்கியுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.