ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான டொனெட்ஸ்கில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்போது, Donetsk பகுதியில் உள்ள அதிக மக்கள் நெரிசல் கொண்ட சந்தையொன்றில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலால் குழந்தைகள், பெண்கள் உட்பட 5 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தின் தலைவர் Denis Pushilin உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைன் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யாவும், கீவ்வும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும் Denis Pushilin, உக்ரைன் நடாத்திய இந்த தாக்குதலானது, மக்கள் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.