பொதுவாக காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
அந்த வகையில் வெளியில் சொல்ல முடியாத பல நோய்களுக்கு மருந்தாக முள்ளங்கி பார்க்கப்படுகின்றது.
முள்ளங்கியில் இருக்கும் கிழங்கு மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவ குணமிக்கவை. சாலட், பராதா மற்றும் சாம்பார் இப்படியான உணவுகளில் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
மேலும் முள்ளங்கி கிழங்கை விட அதன் இலைகளில் புரோட்டின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், குளோரின், வைட்டமின் A, B மற்றும் C உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இது பைல்ஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாக செயற்படுகின்றது.
அந்த வகையில், முள்ளங்கி இலைகளை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பற்றி பதிவில் பார்க்கலாம்.
1. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் முள்ளங்கியுடன் சேர்த்து அதன் இலைகளையும் சாலட் போன்று செய்து சாப்பிடலாம்.
2.பைல்ஸ் பிரச்சினையுள்ளவர்கள் தாரளமாக முள்ளங்கி இலைகளை சாப்பிடலாம். இது பைல்ஸ் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளித்து மீண்டும் நோய் வராமல் பாதுகாக்கின்றது. ஏனெனின் முள்ளங்கியில் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
3. உடலில் உள்ள வெள்ளை செல்களை அதிகரிக்கும் ஆற்றல் முள்ளங்கி இலைகளுக்கு அதிகமாக இருக்கின்றது. அத்துடன் முள்ளங்கியில் குறைவான கிளைசிமிக் எண் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பாதிக்கப்படாது.
4. முள்ளங்கி இலைகளை அதிகமாக சாப்பிடும் பொழுது சருமத்தில் ஏற்படக்கூடிய அரிப்பு, தடிப்பு, எரிச்சல், முகப்பரு போன்றவைகள் தவிர்க்கப்படுகின்றது. ஏனெனின் நுண்ணுயிரிகளை கட்டுபடுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு இருக்கின்றது.
5. இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியன முள்ளங்கி இலையில் அதிகமாக இருக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நோய்களுக்கு எதிராக போராட வைக்கும்.