சிறிலங்கா இராணுவத்தில் அதிகாரி தரத்தில் பணியாற்றும் ஒருவர் பாதாள உலக குழுக்களுடன் இணைந்து பணியாற்றியமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு பாதாள உலககுழுக்களுடன் இணைந்து பணியாற்றிய அவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரி சிறிலங்கா விசேட படையணியில் பணியாற்றி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினர் கஹதுடுவ, உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கடந்த 18ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில் மனித கொலை செய்ய திட்டமிட்டமை தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சோதனையின் போது சந்தேகநபரின் வீட்டில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கஹதுடுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று (22) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.