நடிகைகளில் சமந்தா தனி ரகம். அசாத்திய தைரியசாலி. படப்பிடிப்புக்கு எங்கு போனாலும் தனியே போய் வருவார்.தனியே தங்குவார்.
சம்பளம் பேசுவது, பணம் தொடர்புகள், திறப்பு விழாக்களுக்கு செல்வது, அதற்கும் ரேட் பேசுவது என அனைத்தும் ஒன் மேன் ஆர்மி தான்.
சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தோடு அவ்வளவாக நெருக்கம் இல்லாதவர் சமந்தா. இது பற்றி ஒரு முறை வருமானவரித்துறை ரெய்டு நடந்த போது சமந்தா பெற்றோர்கள், அண்ணன் ஆகியோர் மனம் நொந்து பேட்டி கொடுத்தனர்.
சமந்தா வீட்டிற்கே வருவதில்லை, அவளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி இருந்தார்கள்.
சமந்தாவிடம் கேட்டால் உழைக்கணும், உழைத்து வாழணும். என்னை மட்டுமே நம்பி உட்கார்ந்து சாப்பிடுவர்களை எனக்கு பிடிக்காது என்று கூறி அதிர வைத்தார். அது அப்போது.
இந்த சூழலில், சமந்தாவின் நிச்சயத்தில் சமந்தாவின் பெற்றோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று மாமனார் நாகர்ஜுனா விசாரித்தார்.
உன் அப்பா அம்மா இல்லை என்றால் திருமணம் நடக்காது. அவர்கள் இல்லாமல் நீ இல்லை. எனவே அவர்கள் திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார்.
இதனால் கடும் சமந்தா கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்கிறார்கள்.