பொதுவாக காலையில் எழுந்தவுடன் சிலர் டீ அல்லது காபி குடிப்பார்கள்.
இவற்றை தாண்டி காலையில் எழுந்தவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தான் இந்தியர்கள் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் நெய் சேர்த்து கொள்கிறார்களாம்.
காலையில் நெய் கொஞ்சமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம், மலச்சிக்கல், பலவீனமான மூட்டுகள் மற்றும் அழற்சி குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்ட நோய்கள் வராது என கூறப்படுகின்றது.
இப்படி வேறு என்னென்ன நன்மைகள் நெய் சாப்பிடுவதால் எமக்கு கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நெய், காபி மற்றும் டீ-யை விட இது நீடித்த ஆற்றலை நமக்கு கொடுக்கின்றது. அத்துடன் நெய் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் செரிமான பகுதி சீராகுவதாக கூறப்படுகின்றது.
2. பியூட்ரிக் அமிலம் நெய்யில் அதிகமாகவே இருக்கின்றது. இது குடல் வீக்கத்தை குறைத்து செரிமானத்தை சீர்ப்படுத்துகின்றது. மலச்சிக்கல் பிரச்சினையிருப்பவர்கள் இதனை காலையில் எடுப்பது சிறந்தது.
3. உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால் சரும பிரச்சினைகளிலிருந்து விடுபெறலாம்.
4. டயட்டில் இருப்பவர்கள் கூட காலையில் நெய் சாப்பிடலாம். ஏனெனின் நெய்யில் இருக்கும் சில பதார்த்தங்கள் பசியை கட்டுபடுத்தி எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவியாக இருக்கின்றது.
5. ஒமேகா -3 கொழுப்பமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது நெய்யில் அளவிற்கு அதிகமாகவே இருக்கின்றது. இதனால் எந்தவிதமான பயமும் இன்றி நெய்யை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளலாம்.
6. மூட்டு வலி பிரச்சினையால் வரும் வீக்கத்தை நெய் குறைக்கின்றது. அத்துடன் கீல்வாத விறைப்பையும் சரிச் செய்கின்றது. இவ்வளவு நன்மைகளை எமக்கு தரும் நெய்யை தினமும் காலையில் எடுத்து கொள்வது சிறந்தது.