இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
அதிக வைட்டமின் சி இருப்பதால், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயற்பட்டு உடலை பாதுகாக்கிறது.
மேலும் கொய்யாப்பழம் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க மிகவும் இன்றியமையாதது.
கொய்யா பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கலோரி, உடல் எடையை குறைக்க உதவும்.
கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இவை சாப்பிடும் உணவை எளிதில் மென்மையாக்கி செரிமானத்திற்கு உதவுகிறது, இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் குறைக்கிறது. மேலும், கொய்யா இலை சாறு வயிற்றுப்போக்கின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி போன்ற செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் கொய்யா சேர்த்துக்கொள்வது நல்லது.
கொய்யா இலைச் சாற்றில் உள்ள ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள், கருப்பையின் மென்மையான தசைகளில் உள்ள பிடிப்பை எளிதாக்குகிறது, இது வலி நிவாரணிகளை விட மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள உணவாக அமைகிறது.
கொய்யாப்பழத்தில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது.
மேலும் உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கொய்யா புற்றுநோய், இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும் வாய்ப்பை குறைகிறது. என்றும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யா மிக சிறந்த தெரிவாக இருக்கும்.