நாம் காலை நேர சூரிய ஒளியில் இருப்பதால் உடலுக்கு பலமான சக்திகள் கிடைப்பதோடு வைட்டமின் டி யையும் தருகிறது.
அதிகாலையில் ஒரு எட்டு மணி அளவுக்குள் கிடைக்கும் சூரிய ஒளியே மிகவும் சிறந்தது. அதனால் விடியற்காலையில் எழுந்து வெளியே சென்று இயற்கையான சூழ்நிலையில் சிறிது சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும்.
குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டும். என்னதான் உணவிக் மூலம் பல சத்துக்கள் நமது உடலுக்கு கிடைத்தாலும் அது சரிவர நம் உடலில் சேராது. அந்த வகையில் வைட்டமின் டி சத்து நமதுதேவையான முக்கியமான சத்து ஆகும்.
இது இயற்கையாக உணவில் கிடைத்தாலும் இதை நாம் கவனத்தில் கொள்வது இல்லை எனவே காலைநேர சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் ‘வைட்டமின் டி’ சத்து இயற்கையான முறையில் உடலுக்கு கிடைக்கும்.
இதனால் உடலுக்கு தேவையான அளவு கால்சிய சத்தைப் பெற்று எலும்புகளை வலுவாக்கும். அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
நீங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு இருக்கும் போது தூக்கத்துக்கு காரணமான ‘மெலடோனின்’ ஹார்மோன் சீராக சுரக்கும் இதனால் இரவு இரவு நேரத்தில் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
இந்த சூரிய ஒளி மூலம் கிடைக்கும் ‘வைட்டமின் டி இனால் ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் சார்த்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
காலைநேர சூரிய ஒளி தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை வெகுவாக குறையும். ‘சர்க்கேடியன் ரிதம்’ எனப்படும் உயிர் கடிகாரம் சீராக செயற்படுவதுடன் உள் உறுப்புகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படும்.
இதன் மூலம் மகிழ்ச்சிக்கு காரணமான ‘எண்டோர்பின்’ ஹார்மோன் சுரப்பு சுரக்கும்.
இப்போது இருக்கும் அவசரமான காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியை பெற முடியவில்லை என்றால் வாரத்தில் 3 நாட்களாவது இதற்காக செலவிடுங்கள். இதற்காக முந்தைய நாளின் இரவிலேயே தேவையான திட்டமிடுதல்களை செய்து வையுங்கள்.
வெளியே செல்ல சிரமப்படுபவர்கள் வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். காலை நேர சூரிய ஒளி என்பது கட்டாயமாக நமது உடலுக்கு தேவையான ஒன்று நீங்கள் இயற்கையுடன் இணைந்திருக்கும் வேளைகளில் உங்கள் மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான வழி வகுக்க கூடும்.