இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் துரித உணவுகளையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாரம்பரிய உணவு முறைகளை நாம் அப்படியே மறந்துவிட்டோம்.
இதனால் இந்த கால கட்டத்தில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இவ்வாறான நோய்களை தடுக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் முருங்கை கீரை என்பது எளிதாக கிடைக்கும் ஒரு கீரை… முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
இந்த கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. இந்த முருங்கை கீரையை சாறாக குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் அதிகாலையில் முருங்கை சாற்றுடன் சீரகம், பூண்டு, மிளகு தூள் சேர்த்து குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் குளிர்காலத்தில் ஏற்படும் பருவ காலத் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும்.
இதில் வைட்டமின் ஏ, பி 1, பி2, பி 3, பி 6, பி 12 மற்றும் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கவும், ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கவும் உதவுகின்றது.
இரத்தசோகை இருப்பவர்கள் முருங்கை சாற்றை தினமும் குடித்தல் மிகவும் நல்லது. முருங்கையில் அதிகளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் உடலின் பல்வேறு செயல்பாடுகளை செயற்படுத்த உதவும்.
முருங்கையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களின் சேதத்தைத் கட்டுப்படுத்தி வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் உருவாக்குகிறது.
குர்செடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற சேர்மங்களால் ஏற்படும் அழற்சிக்கு முருங்கை சிறந்த மருந்தாகும். இது உள்ள ஐசோதியோசயனேட்டுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் அதிகமான பிரச்சினையான சிறுநீர் பாதை தொற்றுகளை போக்கவும் இது உதவும்.
இது புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என்பதுடன் நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும் உதவும்.