Loading...
ஒருவரின் தேசிய அடையாள அட்டையின் (NIC) இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“தற்போதுள்ள அரச நிறுவனங்கள் மூலம் மக்களின் வரி பதிவு எண்ணை (TIN) பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
Loading...
அந்த நிறுவனங்களிடம் இருந்து மக்களின் வரிப் பதிவு தொடர்பான தகவல்களை பெற்று அவற்றைப் பதிவு செய்ததன் பின்னர் இலக்கம் ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்படும் என்பதுடன் வரி பதிவு எண்ணை ஒன்லைனில் பெறுவதை எளிதாக்குவதே இதன் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.
Loading...