ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின்-76 இராணுவப் போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொருங்கி தீப் பிடித்து எரிந்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக தகவலின்படி, குறைந்தது 65 உக்ரைனிய போர்க் கைதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பணியாளர்கள் உட்பட மேலும் ஒன்பது பேர் விமானத்தில் இருந்ததாக ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் உக்ரைனியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தலைநகரிலிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷ்யாவின் S-300 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை விமானம் கொண்டு சென்றதாக உக்ரைன் பிராவ்டா இணையதளத்தை மேற்கோள்காட்டி உக்ரைனின் படை தலைமையகம் தெரிவித்தபோதிலும் போர்க் கைதிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
‼️ Il-76 military plane crashes in Belgorod region
There were 63 people on board, Russian media reported. All of them died
The estimated value of the plane is 27 million dollars.
The Russian Defense Ministry said that there were Ukrainian prisoners on board the plane. The… pic.twitter.com/3doCOmZuX7
— NEXTA (@nexta_tv) January 24, 2024