இலங்கையில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு, சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதி ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நடாத்திய ஆய்வினடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினையும் இன்று மன்றில் சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன் இலங்கை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் இம்முறை ஐ.நாவில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், அவை குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் நாள் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.