சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த தினேஷ் – ரச்சிதா சில தனிப்பட்ட காரணத்தால் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட தினேஷ், அவரது மனைவி ரச்சிதா உடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். ஆனால், தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்கிற வகையில் ரச்சிதாவின் பதிவுகள் இருந்தது.
இந்நிலையில் ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
காரணம், ரச்சிதா தொடர்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களுக்கு எதிராகவும், திருமண வாழ்க்கையில் பெண்கள் படும் துன்பங்கள் தொடர்பாக பல பதிவுகளை பதிவிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ரச்சிதா எப்படி இரண்டாம் திருமணம் செய்துகொள்வார்? என்று ரசிகர்களிடம் கேள்வியும் எழுந்துள்ளது.