நமது உடலில் உள்ள உல்லா உறுப்புக்களும் சீராக வேலை செய்வதற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொரு நாளும் மிகவும் சத்தான உணவை உண்ண வேண்டும்.
இன்றய கால கட்டத்தில் மக்கள் அனைவரும் துரித உணவுகளையே அதிகம் உண்கின்றனர், இதனால் உடலில் பல நோய்கள் வருகின்றன .
அந்த வகையில் இதில் ரத்த ஓட்டம் சரியாக அமைவதற்கு நாம் சில சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அப்படியான உணவு என்ன என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
கடலில் உள்ள சிறிய மீன்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் இரத்த ஓட்டம் மேம்பாட்டிற்கு உதவும்.
எலுமிச்சை பழங்களைில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது. இதன் சாற்றை பிளிந்து ஒவ்வொரு நாளும் குடித்து வருவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிஜன்கள் அதிகளவில் உள்ளன. இது ரத்த ஓட்டத்திற்கு பெரும் உதவி செய்கிறது. இதை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதன் முழுப்பயனை பெறலாம் .
பாதாம் பருப்பில் பொட்டாசியம் மக்னிசியம் கல்சியம் உள்ளதால் இரத்த ஓட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.இதை தினசாி உணவிலோ அல்லது தனியாகவோ ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் நல்லது.
பூண்டு கெட்ட கொழுப்பை கரைக்க கூடிய ஒரு பொருள் இதை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டால் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இவ்வாறான உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொண்டால் வாழும் காலம் வரை நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.