நடிகை ஜெயலட்சுமி 22 வயதில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் படாபட் ஜெயலட்சுமி.
இவர், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர், கடந்த 1972ம் ஆண்டு வின்சென்ட் இயக்கத்தில் வெளியான “தீர்த்தயாத்ரா” என்ற மலையாளத் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து “சுப்ரியா” என அழைக்கப்பட்டவர் “ஜெயலட்சுமி” என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தார்.
படத்தில் “படாபட்” என்று சொல்லிக் கொண்டே இருந்ததால். பின்னாளில் அதுவே இவரின் அடைமொழியாகிவிட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் 66 படங்களுக்கு மேல் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார்.
அந்த வகையில் அப்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த ரஜினி, கமல், என்.டி.ஆர். சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் புகழின் உச்சித்தில் இருந்த ஜெயலட்சுமி ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த முடிவிற்கு காதல் தோல்வி தான் காரணம் என செய்தி வெளியாகின.
அந்த வகையில், எம்ஜிஆரின் அண்ணனான எம்ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சுகுமாரும் ஜெயலட்சுமியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயலட்சுமி சம்பாரித்த பணத்தை சுகுமாருக்கு கொடுத்துள்ளார். ஆனால் சுகுமாரோ, ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்துவிட்டார்.
இதனால் மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியன.
பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த ஜெயலட்சுமி இப்படியொரு முடிவு எடுத்தது ரசிர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனை வருடங்கள் கடந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை ஜெயலட்சுமி பிடித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், செய்தியை பார்த்த பலர், “ இன்றும் ஜெயலட்சுமி கண்ணுக்குள் இருக்கிறார்…” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.