உடலில் மிகுதியாக சேர்கின்ற சோடியம், பொட்டாசியம் போன்ற மினரல்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.
இவ்வாறான வெளியேற்றங்களின் பின்னரும் உடலில் கழிவு சேர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இதேவேளை நாம் சாப்பிடும் உணவுகள், மருந்துகள் மற்றும் திரவங்கள் போன்ற அனைத்திலும் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றது.
கழிவுகள் வெளியேறாவிட்டால் நாளடைவில் சிறுநீரகங்கள் பாதிப்படையும். இது போன்ற நிலை வராமல் நம் உடலை பாதுகாப்பது அவசியம்.
அந்த வகையில் சிறுநீரகங்களை எப்படி உணவின் மூலம் சுத்திகரிக்கலாம் என்பது தொடர்பில் பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகங்களை பாதுகாக்கும் உணவுகள்
1. நாளொன்றுக்கு சுமாராக எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் அல்லது குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகங்கள் தொடர்பான நோய்களை வரவிடாமல் கட்டுபடுத்துகின்றது.
2. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். இந்த பாதிப்பின் விளைவாக சிறுநீரகங்களும் பாதிப்படையலாம். இதனை தடுக்க நினைப்பவர்கள் தினமும் கிரேன்பெர்ரி பழங்களை சாப்பிடுவது சிறந்தது. இது சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றுகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
3. ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து கொண்ட சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கொழுப்பமிலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுவதால் நம் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
4. எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும் அத்துடன் பழங்களில் உள்ள சிட்ரின் சத்து சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதை தடுக்கும்.
5. கோடை காலங்களில் வெள்ளரிக்காய் சந்தையில் அதிகமாக விற்பனையாகும்.இது தாகத்தை தணிப்பதுடன் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகின்றது. மேலும் சிறுநீரக கற்கள் உருவாக்குவதை தடுக்கிறது.
6. குறைவான கலோரிகளை கொண்ட சிவரிக்கீரையை சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதேவேளை சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செயற்பாட்டை ஊக்கப்படுத்துகின்றது.