பெண்கள் கைகளில் அணியும் வளையல் கலாச்சாரமாக பார்க்கப்பட்டாலும் இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்திய பெண்கள் தான் அணியும் அணிகலன்களின் ஒன்று தான் வளையல். கலாச்சார நம்பிக்கையின் படி வளையல் அணிவது மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
பெண்கள் வளையல் அணிவதால் ஒட்டுமொத்த அழகையும் அதிகரிக்கின்றது. அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் அதிக பயனை அளிக்கின்றது.
மணிக்கட்டில் வளையல் அணிவதால், செல்களிடையே அதிர்வுகளை உருவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றது. சில நம்பிக்கைகளின்படி, மணிக்கட்டு என்பது ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் சமநிலைக்கு உதவும் அக்குபஞ்சர் மருத்துவம் ஆகும் என கூறப்படுகிறது.
ஆனால் வரலாற்றில் ஆண்களும் வளையல் அணியும் பழக்கத்தையும் கொண்டுள்ளதை நாம் கேள்விப்படுகின்றோம். பெண்கள் பெரும்பாலும் கண்ணாடி வளையல்களை அணிவதுடன், அது எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக எண்ணங்கள் காணப்படுகின்றது.
வளையலின் வரும் மெல்லிசை ஒலி பெண்களை பாதுகாப்பதுடன், வெவ்வேறு வண்ண வளையல்கள் தனித்துவமான அர்த்தத்தை கொண்டுள்ளதாம்.
பச்சை நிறம் அமைதியைக் குறிப்பதாகவும், சிவப்பு கருவுறுதலுக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதாகவும் நம்பப்படுகின்றது.
கர்ப்பிணி பெண்கள் 7 வது மாதத்தில் வளையல் போடுவதற்கான குழந்தையின் மூளை செல்கள் வளர்ச்சியடைவதுடன், குழந்தைகள் வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காண்பதற்கும் உதவுகின்றது.
இது மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துவதால் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்க்கும் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.