பொதுவாக ஆல்கஹால் அருந்துவது மற்றும் புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடான பழக்கமாக பார்க்கப்படுகின்றது.
இது போன்ற பழக்கங்கள் உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, புற்றுநோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. தற்போது மது பழக்கம் ஆண்கள், பெண்கள் என சமூகத்தில் அதிகமாகி வருகின்றது.
இதனை வலியுறுத்தும் விதமாக சமூகக் கூட்டங்கள், கட்சி கூட்டங்கள் என பொது நிகழ்வுகளில் பேசி வருகிறார்கள்.
இப்படியொரு நிலையில் மதுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உடல்நலக் கவலைகள், மனத் தெளிவுக்கான ஆசை, மற்றும் ஒருவரின் பழக்கவழக்கங்களை சவால் செய்ய விரும்புதல் போன்ற காரணங்கள் மது அருந்தும் பழக்கம் துண்டப்படுகின்றது.
இப்படியான சந்தர்ப்பங்களில் மது அருந்தாமல் இருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என பதிவில் பார்க்கலாம்.
மது அருந்தாமல் இருந்தால் என்ன நடக்கும்?
1. ஆல்கஹால் தூக்க சுழற்சியை சீர்குலைக்கிறது. இதனால் சிலர் ஒழுங்காக தூங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். மது பழக்கத்தை கட்டுக்குள் வைப்பதால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
2. அமைதியான ஒரு இரவு பொழுதை குடும்பத்தினருடன் கழிக்க முடியும். அத்துடன் பகலில் வேலைகளில் கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கும்.
3. ஆல்கஹால் கொண்ட பானங்கள் கலோரி அடர்த்தியானவை. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஒரு மாதம் மது எடுத்து கொள்ளாமல் இருக்கும் பொழுது எடை கணிசமாக குறையும்.
4. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. தேவையற்ற வரி விதிப்புக்கள் குறையும்.
6. பதற்றம், மனநிலையில் மாற்றம் இப்படியான பிரச்சினைகள் குறையும்.
7. சுயமாக முடிவெடுக்கும் திறன், வேலை செய்வதற்கான ஆற்றல் அதிகரிக்கும்.
8. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், மகிழ்ச்சியான வாழ்க்கை முறை ஆகியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
9. பிள்ளைகளின் ஆரோக்கியம், படிப்பு, நடத்தை ஆகியவற்றை கவனிக்க முடியும்.