எதிர்வரும் ஓரிரு தினங்களில் மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மரக்கறி விலைகளில் இன்றைய தினம் உயர்வோ விலை வீழ்ச்சியோ இடம்பெற வில்லை என முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (24.01.2024) அன்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்று (25.01.2024) மரக்கறிகள் கொள்வனவு செய்யும் விலையும் மொத்த விற்பனை விலையும் காணப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளில் (25.01.2024) இன்றைய தினத்தில் விலை உயர்வோ, விலை வீழ்ச்சியோ இடம்பெறவில்லையென நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் நுவரெலியா மரக்கறி வகைகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கரட் கோவா, லீக்ஸ், பீட், நோக்கோல், உருளை கிழங்கு உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.