இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.
ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. ஸாக் கிராவ்லே, பென் டக்கெட் இன்னிங்சை தொடங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்தது. அஸ்வின் ஓவரில் 35 ஓட்டங்கள் எடுத்திருந்த டக்கெட் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஸாக் கிராவ்லேயும் (20) அஸ்வின் சுழற்பந்துவீச்சிலே சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பை டெஸ்ட் வரலாற்றில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.
இதுவரை 96வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 492 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.