மாலி நாட்டில் கடந்த 20ஆம் திகதி தங்கச் சுரங்கமொன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலியின் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மண்ணில் புதைந்துள்ளவர்களை மீட்பதற்கு உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனவே இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியாத நிலையில் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆபிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வழமையாகிவிட்டது.
ஏனெனில் இது போன்ற சுரங்கப் பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.