யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம் (26) குறித்த கைது இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த பெண் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது பெண்ணிடமிருந்து, 10 லீட்டர் கசிப்பும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.